பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட சிதம்பரம் சாலை, ஆஸ்பத்திரி சாலை, டாக்டர் தேவதாஸ் சாலை, ஆனந்தவல்லி வாய்க்கால் சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைக்க கோரிக்கை.
பேராவூரணி பகுதி தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
நகரில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும்குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள், கப்பிகள் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்வதில்லை.
குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் குடியிருக்கும் ஆஸ்பத்திரி சாலை, தேவதாஸ் சாலை, சிதம்பரம் சாலை பகுதி சாலைகள் படுமோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. நகரில் பெரும்பாலான இடங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. எனவே படுமோசமாக உள்ள சிதம்பரம் சாலை மற்றும் உள் இணைப்பு சாலைகளை உடனடியாக சீரமைத்தும், புதிதாக சாலை அமைத்துத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பேராவூரணி பகுதியில் உள்ள சிதம்பரம் சாலை, ஆஸ்பத்திரி சாலை, டாக்டர் தேவதாஸ் சாலை, ஆனந்தவல்லி வாய்க்கால் சாலை சீரமைக்க கோரிக்கை.
மார்ச் 18, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க