பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்கையாக விளையும் காய்கறிகள், கீரைகள், பழங்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து ராசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்திடப்படாமல் காய்கறிகள், பழங்கள், பல்வேறு வகையான கீரைகள் விளைவிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கும் உள்நோயாளிகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இயற்கை முறை காய்கறிகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து தாய்மார்கள் அறிந்துகொள்ளும் வகையில் வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்ராஜன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் இயற்கை உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தோட்டத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விளக்கப்பட்டது. முகாமில் கர்ப்பிணிகள், குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டபெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, கீரை, பழங்கள் வழங்கப்பட்டன.
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்கை காய்கறிகள் விழிப்புணர்வு முகாம்
மார்ச் 06, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க