இன்று குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம் நடத்தப்படும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி.
மார்ச் 09, 2018
0
பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம் நடத்தப்படும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி. இப்போட்டி வருகின்ற 09-03-2018 முதல் 11-03-2018 வரை பகல், இரவாக கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் 9 அணியினர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டி ஆண்கள் பிரிவில் 5 அணியும் மற்றும் பெண்கள் பிரிவில் 4 அணியும் பங்கேற்க உள்ளது.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெரும்
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹40,000 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹30,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
பெண்கள் பிரிவில் வெற்றி பெரும்
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க