பேராவூரணியில் ஏந்தல் என்னும்பகுதியில் நீலகண்டபிள்ளையார் கோவில் அமைந்துள் ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவுதிருவிழா கொடியேற்றம், காப்பு அணிதல் தொடங்கி பால்குடம், காவடி, தேரோட்டம், தீர்த்தம், திருக்கல்யாணம், தெப்பம் என விடையாற்றியுடன் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்காக ஏப்ரல் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குகொடியேற்றமும், இரவு 10 மணிக்கு காப்பு அணிதலும்நடைபெறுவதோடு முதல் நாள் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 12 ஆம் நாள் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாகஅதிகாரி டி. கோவிந்தராசு, திருக்கோயில் பணியாளர்கள்,முடப்புளிக்காடு கிராமத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இத்தகவலை திருக்கோவிலின் நிர்வாக அதிகாரிடி.கோவிந்தராசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீலகண்டபிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 20-இல் தொடக்கம்
ஏப்ரல் 14, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க