பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மார்ச் 27ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் நாடியம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவிளக்கு திருவிழா நடந்தது. இதில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள், நாடியம்மன் கோயிலுக்கு வந்து மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை கோயில் தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து ேதர் இழுத்து சென்றனர். தேரடி தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரி ரோடு, பிள்ளையார்கோயில் தெரு, தலைமை தபால் நிலையம் வழியாக பெரியதெருவில் தேர் நிறுத்தப்பட்டது. நாடியம்மனின் 2ம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை மீனாட்சி அம்மன் தரிசனமும், இரவு முத்து பல்லக்கில் வீதியுலாவுடன் நாடியம்பாள் கோட்டைக்கு எழுந்தருளுவார். நாளையுடன் திருவிழா முடிவடைகிறது.