பேராவூரணியில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்.

Unknown
0
பேராவூரணி குமரப்பா பள்ளியில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது. பேராவூரணி ஜே ஸிகே பவுண்டேசன், ஏசிஇ டிரஸ்ட்,  தஞ்சாவூர் ஐமாஸ் அகாதெமி ஆகியன இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் குமரப்பா பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைபொதுச்செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஏசிஇ டிரஸ்ட் நிர்வாகிகள் மெய்ஞானமூர்த்தி, காந்தி, ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏசிஇ டிரஸ்ட் தலைவர் அடைக்கலம் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஐமாஸ் அகாதெமி நிறுவனர் ஸ்வர்ணாசூரியமூர்த்தி, தலைமை பயிற்சியாளர் ஜோசப்பின் லாரன்ஸ், குமரப்பா
அறக்கட்டளை அறங்காவலர் கணபதி, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.
ஒரு மாத காலம் நடைபெறும் பயிற்சி வகுப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும்,  ஏழை மாணவர்களுக்கு கட்டணச் சலுகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தனர். ஏசிஇ டிரஸ்ட் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top