பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகையும் கிராம மக்கள் வழங்குகின்றனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு
ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு. ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே 15 புதிய மாணவர்கள் சேர்ந்தனர்.
புதிதாக சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரி அங்கயற்கண்ணி தலைமையில் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் புதிதாகசேர்ந்த 15 மாணவர்களுக்கு நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினர். 15 குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது புதிதாக 50 மாணவர்களை சேர்ப்பது என்றும் அவர்களுக்கும் இதேபோல் தங்க நாணயமும் ஊக்கத்தொகையும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நன்றி:தினகரன்
பேராவூரணியில் விநோதம் அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்கநாணயம்.
ஏப்ரல் 22, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க