பேராவூரணி பேரூராட்சி 8, 9- ஆவது வார்டு மக்கள் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மு.சீனிவாசன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், பேராவூரணி பேரூராட்சி 8, 9- ஆவது வார்டுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் பழுதடைந்து 4 மாதங்கள் ஆகி விட்டன. 9- ஆவது வார்டு ரயில்வே லைன் கிழக்கு தெருவில் 50 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இதற்கான குடிநீர் இணைப்பு கட்டணம் பாக்கி இல்லாமல் செலுத்தப்பட்டுள்ளன. இந்த வார்டில் உள்ள பழுதடைந்த ஆழ்குழாய் கிணற்றை உடனடியாக சரி செய்து, புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அலுவலர்களிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதே நிலை நீடித்தால் வரும் 9- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி பேரூராட்சி காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்ட அறிவிப்பு.
ஏப்ரல் 08, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க