பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திலுள்ள 28 அஞ்சலகங்களில் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றார் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.பஞ்சாபகேசன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய 2 தலைமை அஞ்சலகங்கள், அதிராம்பட்டினம், ஆலத்தூர், ஆவணம், கோட்டைத்தெரு, குருவிக்கரம்பை, மதுக்கூர், நாடிமுத்துநகர், ஒரத்தநாடு, ஒட்டங்காடு, பாப்பாநாடு, பேராவூரணி, மேலஉளுர், தாமரங்கோட்டை, திருவோணம், திருச்சிற்றம்பலம், வடசேரி, ஆயக்காரம்புலம் 2 ஆம் சேத்தி, கரியாப்பட்டினம், குன்னலூர், முத்துப்பேட்டை, பாமணி, தகட்டூர், தலைஞாயிறு அக்ரகாரம், தோப்புத்துறை, வேதாரண்யம், விளக்குடி ஆகிய இடங்களில் இயங்கும் துணை அஞ்சல் நிலையங்களிலும் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதார் எண் பதிவுக்கு தங்களது வயது மற்றும் முகவரிக்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
திருத்தங்கள் செய்ய வயது மற்றும் முகவரிக்கான சான்றிதழ்களுடன் ஆதார் அட்டையையும் கொண்டு வர வேண்டும்.
ஆதார் எண்ணை பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் திருத்தம் செய்ய ரூ.30 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04373-252078, 254188, 04369-222890 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி அஞ்சலகங்களில் ஆதார் அட்டை பதிவு, திருத்தம் செய்யலாம்.
மே 19, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க