காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாலை பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.மெய்ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கே.வி.கிருஷ்ணன், வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கத்
தலைவராக ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளராக ஏ.கே.பழனிவேலு, பொருளாளராக சி.கணேசன், அமைப்பாளராக கே.வி.கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் சு.போசு, வி.கோபால், ஏ.கே.வெள்ளிமலை, மு.வீரா,
நா.வெங்கடேசன், ஆறு.நீலகண்டன், அமுதம் கந்தசாமி, வீ.கருப்பையன், பொன்.ராமமூர்த்தி, எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட 25 பேர் கொண்ட செயற்குழுவும் அமைக்கப்பட்டது.
கூட்டத்தில், " அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்த காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே விரைந்து ரயில்சேவையை தொடங்க வலியுறுத்துவது, அதற்காக கவன ஈர்ப்பு துண்டுப்பிரசுரம் வெளியிடுவது, ரயில்வே அதிகாரிகளை, மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, ரயில் சேவை பணிகளை தொடங்க வலியுறுத்துவது" எனவும் தீர்மானிக்கப்பட்டது.
காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை.
மே 13, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க