பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் கடந்த 15 நாளாக முறையாக குடிநீர் வரவில்லை. மோட்டார் பழுது காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால், தண்ணீர் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், வெள்ளியன்று காலை பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில், அம்மையாண்டி கடை வீதியில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் அ.ராமலிங்கம், சிபிஎம் கிளைச் செயலாளர் ஆத்மநாதன், சத்தியசீலன், கே.மாரிமுத்து, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.முருகேஸ்வரி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரவடிவேல் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மின் மோட்டார் அமைத்து இரு தினங்களுக்குள் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மறியல்.
ஜூன் 16, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க