தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு.

Unknown
0
தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, 8 சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைகளை களையவும் தகுதியுடைய விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை வீடு, வீடாக சென்று கள ஆய்வுபணி மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடு அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. அவர்்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர் பட்டியலில் அனைவரது பெயர்களும் விடுபடாமல் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் வெவ்வேறு இடங்களில் இல்லாமல் ஒரே பாகத்தில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் சரிபார்க்கும் பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வாக்கு சாவடி நிலை அலுவலர் வருகைதரும்போது திருத்தம் மேற்கொள்ளவேண்டியிருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம். மேலும் 1-1-2018-ஐ தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தொடர் திருத்தப்பணியில் 18வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் அதாவது 2-1-2000-க்கு முன்னர் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது தொடர்பாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளிக்கலாம். இக்கள ஆய்வு பணியானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்உரிய ஒப்பளிப்பு ஆணை பிறப்பித்த பின்னர் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம் பெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர் அருகில் உள்ள இசேவை மையம் மூலம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இணையதளம் மூலமும் வாக்காளர் பெயர் சேர்க்கலாம். இணையதள முகவரி : http://elections.tn.gov.in/


நன்றி:தினத்தந்தி
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top