பேராவூரணி, சேதுபாவா சத்திரம் ஒன்றியம் சார்பில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, வி.தொ.ச. சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆ.இளங்கோவன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா, வி.தொ.ச. மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, பேராவூரணி ஏ.வி.குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரனிடம் மனு அளிக்கப்பட்டது.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடிமனை, குடிமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்து காத்திருப்புப் போராட்டம்
ஜூலை 10, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க