பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு பெரிய ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய காட்டாற்றை விரைந்து தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் அருகே ஊமத்தநாட்டில் 1000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பேராவூரணி, பூக்கொல்லை, கழனிக்கோட்டை, முடச்சிக்காடு கலைஞர் நகர் வழியாக செல்லக்கூடிய காட்டாறு மூலம் தான் மழை காலங்களில் தண்ணீர் வந்து ஏரி நிரம்ப வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி ஏரி வரண்டு கிடக்கிறது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாகவே ஏரிப்பாசன சாகுபடியும் கிடையாது. அதேநேரம் மழையின்றி காட்டாறுகளில் தண்ணீர் வராததால் காட்டாறு முழுவதும் நெய்வேலி காட்டாமணக்கு செடி மற்றும் பல்வேறு செடி கொடிகள் படர்ந்து மூடியுள்ளது. இந்தாண்டாவது மழை பெய்து ஏரி பாசன சாகுபடி நடைபெறுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பெய்யும் மழைநீர் ஏரிக்கு தங்கு தடையின்றி கிடைக்க காட்டாற்றை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.