பேராவூரணியில் லயன்ஸ் சங்கம், வாசன் கண் மருத்துவமனை, ஐ டி எப் சி பாரத் லிமிடெட் இணைந்து சி.வி.லாட்ஜ் அருகில் செவ்வாய் அன்று கண் பரிசோதனை நடத்தினர்.
முகாமிற்கு ஐ டி எப் சி பாரத் லிமிடெட் கிளை மேலாளர் சி.சன்னப்பன் தலைமை வகித்தார்.
லயன்ஸ் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர்கள் கே.கே.டி.சுப்பிரமணியன், ஆர்.மதியழகன், பொருளாளர் ஏ.சி.சி.ராஜா, நிர்வாகிகள் கனகராஜ், ஜெயகுமார், சரவணன்,
ஐ டி எப் சி பாரத் லிமிடெட் சமூக நலத்துறை பொறுப்பாளர் கே.சந்துரு, தஞ்சை வாசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சை வாசன் கண் மருத்துவமனை டாக்டர் சிபு வர்கீஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் 341 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இவர்களில் 35 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மலிவு விலையில் 45 பேருக்கு மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.
செய்தி: எஸ்.ஜகுபர்அலி - பேராவூரணி
செய்தி: எஸ்.ஜகுபர்அலி - பேராவூரணி