பேராவூரணி திருச்சிற்றம்பலத்தில் நாளை புதன்கிழமை (ஜூலை 25) காலை 10 மணிக்கு மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி முகாமிற்கு தலைமை வகிக்கிறார்.
முகாமில், பட்டா மாறுதல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முதியோர் உதவித்தொகை வழங்கல் உள்ளிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன. திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுத்து, உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நன்றி:தினமணி