பேராவூரணி கடைமடைப் பகுதிகளில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வருவதை கண்காணிப்புக்குழு தலைவர் லலிதா வியாழனன்று ஆய்வு செய்தார். மேட்டூரில் கடந்த 19 ஆம் தேதியன்று திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணை வந்தடைந்ததும் டெல்டா பகுதி பாசனத்திற்கு 22 ஆம் தேதி திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் ஏனாதிகரம்பை - பைங்கால் காவிரி கிளை வாய்க்காலில், வியாழக்கிழமை வந்தடைந்தது. பைங்கால், அம்மையாண்டி வாய்க்கால், பின்னவாசல் வடக்கு வாய்க்கால் ஆகியவற்றில் துணை ஆட்சியர் ஆய்வு செய்தார். வாய்க்கால்களில் கரையோரங்களின் உறுதித்தன்மை மற்றும் தண்ணீர் செல்லும் வழிகளை ஆய்வு செய்த துணை ஆட்சியர், தண்ணீர் தடையின்றி செல்லவும், அடைப்புகள் இருந்தால் சரிசெய்யவும் உத்தவிட்டார்.
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்தது.
ஜூலை 28, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க