குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப்படை சார்பில் அனுசரிக்கப்பட்டது. தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வீ.திருமுடிச்செல்வன், கா.பழனிதுரை, என்.கோபிகிருஷ்ணா, பி.பாலசுப்பிரமணியன், அ.சரவணன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவுதின அஞ்சலி.
ஜூலை 29, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க