பேராவூரணி வட்டார வேளாண் துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் திருச்சிற்றம்பலத்தில் பண்ணைக் குட்டையில் உள்நாட்டு மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆர். மதியரசன் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க விவசாயம் சார்ந்த தொழிலான மீன் வளர்ப்பு முக்கியமானதாகும். விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைத்து மீன் வளர்க்க அரசு மானியம் அளிக்கிறது. மானியத் திட்டங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் மீன்பண்ணை அமைத்து பயனடையலாம் என்றார் .
மீன் வளர்ப்புத் துறை உதவி ஆய்வாளர் மோனிகாசெல்வி மீன் வளர்க்கும் முறை, 6 வகையான உள்நாட்டு மீன்களை வளர்க்கும் முறை பற்றி விளக்கி, மீன்வளர்ப்பு துறை மூலமாக பண்ணைக் குட்டை அமைத்து மீன் வளர்ப்பதற்காக அரசு வழங்கும் மானியம் ரூ. 65000-ஐ விவசாயிகள் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.