பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்கு கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகளை சென்றடையவில்லை. 11 நாட்களுக்கு பின்னரும் தண்ணீர் வராததால் கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தண்ணீர் வராததால் நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கடைமடை பாசன பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இனியும் தாமதிக்காமல் கடைமடை பாசன பகுதி வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேராவூரணி சுற்று வட்டார கிராமங்களில் ஆற்றில் தண்ணீர் வராததால் கடைமடை பகுதி விவசாயிகள் ஏமாற்றம்.
ஜூலை 31, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க