பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தில் குருவிக்கரம்பையைச் சேர்ந்த செங்கொல்லையார் என்பவருக்குச் சொந்தமான கயிறு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முத்துமாணிக்கம் (40) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கயிறு தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் மற்றும் பேராவூரணி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் கயிறு தொழிற்சாலையில் இருந்த கயிறு கட்டுகள், இயந்திரங்கள் என ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து தகவல் அறிந்த பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் ஜோதி, நாடியம் கிராம நிர்வாக அலுவலர் (பொ) சந்திரசேகர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:தீக்கதிர்
நன்றி:தீக்கதிர்