கடைமடைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பேராவூரணியில் வரும் 28ம் தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பேராவூரணியில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாதமாகியும், கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் வராததை கண்டித்தும், உடனடியாக முறை வைக்காமல் தண்ணீர் விடக்கோரியும் வரும் 28ம் தேதி பேராவூரணியில் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவது. ஏரி, குளங்களில் மண் அள்ளுவதற்கு, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இதுவரை ஏரி, குளங்களை நிரப்பி தராத பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாய சங்க மாவட்ட தலைவர் பாலசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் காசிநாதன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர்சின்னத்தம்பி, ரவி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஷேக் இப்ராஹிம், அமுதம் கந்தசாமி, திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் பேராவூரணி அன்பழகன், சேதுபாவாசத்திரம் வடக்கு முத்து மாணிக்கம், அப்துல் மஜீத், விடுதலை சிறுத்தைகள் மோட்ச குணவழகன், மைதீன், மதிமுக மணிவாசன், குமார், சிபிஎம் சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையன், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி குமாரசாமி, சேதுபாவாசத்திரம் வேலுசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.