கேரளாவில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதற்காக நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், மாணவர்கள் பங்கேற்ற நிதி வசூலிப்பு வசூலிப்பு பேரணியை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் க. ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர்கள் பேராவூரணி கருணாநிதி, குருவிக்கரம்பை மனோகரன், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சற்குணம், குருவிக்கரம்பை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோபி கிருஷ்ணா, ஆசிரியர்கள் அடைக்கலமணி, சரவணன் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி தாலுகா அலுவலகம் தொடங்கி, சேது சாலை, முதன்மைசாலை, அறந்தாங்கி சாலை வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் வசூலிக்கப்பட்ட தொகை ரூ 12 ஆயிரத்து 230 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நன்றி: மெய்ச்சுடர்