பேராவூரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வியாழன் அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் க.சற்குணம் தலைமை வகித்தார். பேராவூரணி வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் நடைபெற்ற தூய்மை பணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அ.கருணாநிதி தலைமை வகித்தார். பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் கலந்து கொண்டு தூய்மைப் பணியை தொடங்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குருவிக்கரம்பை
குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், குருவிக்கரம்பை ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் ராமராஜன், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ.சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், குமார், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் என்.கோபிகிருஷ்ணா நன்றி கூறினார்.
நன்றி: தீக்கதிர்