பேராவூரணி வட்டாரம் அம்மையாண்டி, செங்கமங்கலம் மற்றும் பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொசுப்புழு ஒழிப்பு மற்றும் புகை மருந்து அடித்தல் பணியினை பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தரராஜன் மேற்பார்வையிட்டார்.இதே போல் கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை கலா தலைமை வகித்தார். ஆசிரியை எஸ்.சாந்தி முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நன்றி:தீக்கதிர்
நன்றி:தீக்கதிர்