பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் வேளாண்மைத்துறை சார்பாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உழவர் ரதம் என்ற விழிப்புணர்வு பிரச்சார வாகனம் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் உ.துரைமாணிக்கம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத்தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தொ.வே.கூ.சங்க இயக்குநர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பிரச்சார வாகனத்தில் கலைக்குழு மூலம் தெருக்கூத்து, பாடல் வாயிலாக பயிர்க் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் சித்தாதிக்காடு, பைங்கால், ஆவணம், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
நன்றி:தீக்கதிர்