பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். புதிய பேருந்து நிலையம், மெயின்ரோடு, பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, ஆவணம் சாலை, ரயிலடி உள்ளிட்ட முக்கிய இடங்களில் துண்டுப் பிரசுரம் வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் எல்ஐசி தலைமை ஆலோசகர் கே.நீலகண்டன், துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் கமலநாதன், கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வெடிகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு, மத்தாப்பு, வெடிகள் வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணியக்கூடாது. பருத்தியிலான ஆடைகளையே அணிய வேண்டும். திறந்த வெளியிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
எதிர்பாராதவிதமாக யார் மீதேனும் தீப்பற்றினால் அதிகம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க வேண்டும். எதிர்பாரா விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.