பேராவூரணி பொன்காடு பெரியகுளம் அய்யனார் கோயில் அருகே ரெங்கசாமி என்பவருக்கு சொந்தமான தோப்பில் சில வாழைக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார். குலை தள்ளும் நிலையில் கஜா புயலால் வாழை மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் வாழை மரத்தை அடியோடு வெட்டி அப்புறப்படுத்தினார். இதில் சில தினங்களுக்கு முன் வெட்டப்பட்ட வாழை மரத்தில் இருந்து குலை தள்ளியது. இதையறிந்த மக்கள், புயல் உருக்குலைத்தும், வெட்டுபட்டும் போராடி மீண்டும் தழைத்த வாழையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
நன்றி: தீக்கதிர்.