பேராவூரணி வட்டம், வளபிரமன்காடு ஊராட்சியில் அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு.

Peravurani Town
0



பேராவூரணி வட்டம், வளபிரமன்காடு ஊராட்சியில் அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ஏற்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.01.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட வளபிரமன்காடு ஊராட்சியில் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 40 அடி ஆழ கிணற்றில் 1982ம் ஆண்டு 100 அடி அளவில் போர்வெல் போடப்பட்டது. அதில் கடந்த ஒரு மாதமாக அதிக அளவில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், புவியியல் துறை அலுவலர்களை கொண்டு கொந்தளிப்பு ஏற்படும் கிணற்றினை ஆய்வு செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இவ்வாய்வின் போது பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, வட்டாட்சியர் பாஸ்கரன், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top