பேராவூரணி பேரூராட்சியில் எல்இடி தெருவிளக்கு பணி தீவிரம்.

IT TEAM
0

பேராவூரணி பகுதியில் கஜா புயலால் 1620 தெருவிளக்குகள் முற்றிலுமாக சேதமடைந்தது.இதையடுத்து பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிசாமி மற்றும் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் வி.குற்றாலிங்கம் அறிவுறுத்தலின்படி பாதிப்படைந்த மின்கம்பங்கள் மாற்றப் பட்டு, ஏற்கனவே இருந்த டியூப் லைட்டுகளுக்கு பதிலாகநவீன எல்இடி விளக்குகளாக அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி 18 வார்டுகளிலும் உள்ள 1,620 தெருவிளக்குகளும் ரூ 62 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில்எல்இடி மின் விளக்குகளாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆண்டுஒன்றுக்கு, தோராயமாக ரூ 5 லட்சம் மின்கட்டணம் பேரூராட்சிக்கு சேமிப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம் பேரூராட்சி மின் பணியாளர் கோவிந்தசாமி கண்காணிப்பில் மின்விளக்கு அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் முறையாகநடைபெறுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி மற்றும் தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் ஆகியோர் பேராவூரணி பேரூராட்சி பகுதியில் புதன் கிழமை ஆய்வு செய்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top