தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெல் கொள்முதலுக்கு மேலும் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா, தாளடி பருவத்தில் நெல் அறுவடை பணி துவங்கியுள்ளது. இதையடுத்து நெல் கொள்முதல் செய்வதற்காக 267 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போதைய தேவைக்கேற்ப மேலும் 37 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஞ்சை வட்டத்தில் 35 இடங்கள், பூதலூர் வட்டத்தில் 11 இடங்கள், திருவையாறு வட்டத்தில் 17 இடங்கள், ஒரத்தநாடு வட்டத்தில் 84 இடங்கள், பட்டுக்கோட்டை வட்டத்தில் 26 இடங்கள், பேராவூரணி வட்டத்தில் 9 இடங்கள், பாபநாசம் வட்டத்தில் 43 இடங்கள், கும்பகோணம் வட்டத்தில் 43 இடங்கள், திருவிடைமருதூர் வட்டத்தில் 36 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் அறுவடை செய்யும் சம்பா, தாளடி நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கூடுதலாக 37 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு.
ஜனவரி 25, 2019
0

பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க