பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குடியரசு தின விழா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த.பழனிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேசியக் கொடியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலதி அவர்கள் ஏற்றினார்.
பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்வில் பேராவூரணி சுழற் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டமும் நடைபெற்றது.
பள்ளி கழிப்பிடத்திற்கு டைல்ஸ் அமைத்துத்தர உறுதியளித்த சுழற் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு இடவசதி அமைத்துத்தர தலைமை ஆசிரியர் மூலமாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
எல்கேஜி யுகேஜி வகுப்புகளை ஆங்கில வழியில் தொடங்கும் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து தமிழ் வழியில் தொடங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
மிக நீண்ட நாட்களாக கோரியும் நிறைவேற்றாத நிலையில் பள்ளியில் பழுதடைந்து உள்ள பள்ளிக் கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்தி தருமாறு பேராவூரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நன்றி: மெய்ச்சுடர்