வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போனவர்களை சேர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.