பேராவூரணியில் முனைவர் ச.சுந்தரம்பாள் மோகன் எழுதிய, போட்டித் தேர்வுகளுக்கான "தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம்" ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குறள் நெறி பரப்புரையாளர் பாவலர் மு.தங்கவேலனார் விழாவிற்கு தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பேரூராட்சி முன்னாள் தலைவர் என்.அசோக்குமார், பட்டுக்கோட்டை எஸ்.இ.டி.வித்யாதேவி, கல்விக்குழும தாளாளர் லெ.கோவிந்தராசு, கல்வியாளர் இரா.சந்திரசேகரன், செய்தியாளர் சங்கத் தலைவர் கே.கான்முகமது, சின்னப்பத்தமிழர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை கீதம் பதிப்பகம் ஞா.முத்து ச்சாமி வரவேற்றார். புதுகை சுகந்தி குழுவினர் தமிழிசை பாடினர். "தமிழ் இலக்கியம்" நூலை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறைப் பேராசிரியர் க.திலகவதி வெளியிட ஆசிரியர்கள் சு.போசு, நா.நடராஜன், இரா.சுப்பிரமணியன், ஆறு.நீலகண்டன், பத்திரிகையாளர் ம.மு.கண்ணன், முனைவர் லெ.ராஜேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். "தமிழ் இலக்கணம்" நூலை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட, நல்லாசிரியர் த.சந்திரசேகரன், சி. ராமலிங்கம், எஸ்.கந்தப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக நூல்களை அறிமுகம் செய்து ஆசிரியர் கோவி.தாமரைச் செல்வன், பேராசிரியர் ச.கணேசகுமார் ஆகியோர் பேசினர். நூலாசிரியர் ச.சுந்தரம்பாள் மோகன் ஏற்புரையாற்றினார். நிறைவாக ஆசிரியர் சி.மோகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பத்திரிகையாளர் வெ.நீலகண்டன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
நன்றி:தீக்கதிர்