பேராவூரணியில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்தியன் வங்கி கும்பகோணம் மண்டல மேலாளர் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு முன்னிலை வைத்தார். இந்தியன் வங்கியின் முதன்மை அதிகாரி என்.பன்னீர்செல்வம், ஏ.ராஜா ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் புதிய கிளையையும், ஏடிஎம் மையத்தையும் திறந்து வைத்தார். பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் என்.அசோக்குமார், இந்திரா க.அன்பழகன், நகர வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஆ.பழனிவேல், வங்கி கட்டிட உரிமையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியன் வங்கியின் பேராவூரணி கிளை மேலாளர் சிவ.சிதம்பரம் நன்றி கூறினார்.
பேராவூரணியில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு.
மார்ச் 05, 2019
0

Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க