பேராவூரணி பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இப்பகுதியை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து எந்த ஒருபொருட்களையும் வாங்குவதற்கும் பேராவூரணிக்கு தான் வரவேண் டிய சூழல் உள்ளது. அதிலும் பேராவூரணியில் மிகமுக்கியமான சாலையாக மெயின் ரோடு, சேதுசாலை, ஆவணம் சாலை உள்ளது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மேலும் தற்போது பிரசித்தி பெற்றஅருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோயிலில் திருவிழா தொடங்க உள்ளது. பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடும் நிலை உள் ளது. பேராவூரணி நகர்ப்புறத்தில் உள்ள சாலையை அகலப்படுத்தவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. பேராவூரணி கடைத்தெருவில் அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறைக்கு பேராவூரணியில் மிக முக்கியமான சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்என வாகன ஓட்டிகள், பொதுமக்கள்மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினரும் பேராவூரணி அண்ணாசிலை அருகாமையில் ஒருவேகத்தடையும், பெரியார் சிலைஅருகாமையில் ஒரு வேகத்தடையும் அமைக்க முடிவு செய்து 20 நாட்களுக்கு முன்பு வேலை தொடங்கி சாலையில் ஒரு பகுதி மட்டும் வேகத்தடை போடப்பட்டது. மறுபகுதியில் வேகத்தடை முழுமை பெறாமல் இருப்பதால் அதுவே போக்குவரத்திற்கு பெரும்இடையூறாக உள்ளது. இதனால்சாலை விபத்துக்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வீ. கருப்பையன் கூறுகையில், உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர், முழுமை பெறாமல் உள்ள இந்த வேகத்தடைகளின் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப் படும்” எனக் கூறியுள்ளார்.
நன்றி: தீக்கதிர்