பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் திறக்கப்பட்டது. வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். உதவிதேர்தல் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் சேவை மையத்தை திறந்து வைத்தார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல்பாடு குறித்துநடைபெற்ற செயல் விளக்க நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவுதுணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப்அலி, சுப்ரமணியன், ஜோதி, வருவாய்த்துறை அலுவலர்கள் கிள்ளிவளவன், தர்ஷனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி:தீக்கதிர்