பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாதனை.... பத்தாம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி.
பன்னிரண்டாம் வகுப்பில் 425 மாணவிகளில் 424 பேர் தேர்ச்சி...
பரம ஏழைகளின் புகலிடமாய் விளங்கும் அரசுப் பள்ளிகள் அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.
அரசும் நடுத்தரவர்க்கமும் செல்வந்தர்களும் புறக்கணிக்கும் அரசுப் பள்ளி கேட்பாரற்று இயங்கி வருகிறது.
தரமற்ற பள்ளி கட்டிடங்கள், போதிய ஆசிரியர்கள் இல்லாதது, பெற்றோர்களின் கவனிப்பின்றி வறுமையோடு போராடும் மாணவர்கள் இதுதான் அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை.
அதையும் தாண்டி ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் கல்வித்துறை.
செயல்படவே முடியாத நிலையில் பள்ளி நிர்வாகம்...
மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடம் என்றால். . சொல்லவே வேண்டாம் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே அரசுப் பள்ளியை இயக்க வேண்டிய நிலை தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும்...
எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி விழுக்காட்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
பெண் பிள்ளைகளைப் பெற்ற பேராவூரணியைச் சுற்றிலும் உள்ள உழைக்கும் பாட்டாளி வர்க்கப் பெற்றோர்களின் நம்பிக்கையாய் பேராவூரணி நகரில் சிறப்பாக இயங்கி வருகிறது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள்
பெரும்பாலான மாணவர்களின் கல்வியில் அக்கறையற்ற பெற்றோர்கள்
இந்தச் சூழலில் அனைத்து மாணவர்களையும் பொதுத்தேர்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இலக்கு.
இலக்கை வெற்றிகரமாக எட்டியிருக்கிறார்கள் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.
பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கிட அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியரையும் மெய்ச்சுடர் தனது சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், மாணவர்கள் என அனைவரிடமும் ஒரு ஒருமித்த ஒத்துழைப்பை உருவாக்கி பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய அம்மா திருமதி திருமதி சி.கஜானா தேவி. இவர் இப் பள்ளியில் தலைமை ஆசிரியராக கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் . தான் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் சிறந்த தேர்ச்சி விழுக்காட்டை வழங்கியதோடு மட்டுமல்லாமல் இப் பள்ளி மாணவிகளின் அன்பைப் பெற்று இருக்கிறார்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உருவாக்கி வைத்திருக்கும் சுமையற்ற கல்வி முறை, மாணவிகளிடம் அதிர்ந்து பேசாதது எண்ணிக்கையில் அதிக மாணவிகள் இருந்தாலும் ஒவ்வொரு மாணவியையும் பெயர் சொல்லி அழைக்கும் அக்கறை இவைகள் எல்லாம் இங்கு படிக்கும் மாணவிகளிடம் உளவியலாக தலைமையாசிரியரிடம் ஒட்டுதலையும் படிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.
ஆசிரியர்களைத் தாண்டி அவ்வப்போது தலைமைப் பண்புகள் நிறைந்த மனிதர்களை மாணவர்களோடு உரையாட வைப்பதும் இப் பள்ளி மாணவர்களின் முழுமையான தேர்ச்சிக்கு காரணம்.
பொதுத்தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நிர்வாகத் திறன் மிக்க தலைமை ஆசிரியருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி:மெய்ச்சுடர்