பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில், நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.பயிற்சி வகுப்பை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் துவக்கி வைத்தார். தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் ஸ்டெல்லா ஞானமணி பிரமீளா, மகளிர் திட்ட மாவட்ட அலுவலர் இந்துபாலா முன்னிலை வகித்தனர்.
வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது, அஞ்சல் வாக்குகளை அளிப்பது மற்றும் தேர்தலை முறையாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தபால் வாக்கு பெட்டிகள், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து காட்டப்பட்டு பிறகு பூட்டி சீல் வைக்கப்பட்டது. பயிற்சி முகாமில் பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் யுவராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.