பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை.
IT TEAM
ஏப்ரல் 07, 2019
0
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.