பேராவூரணி யில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல், பேராவூரணி பகுதியை பெருமளவு தாக்கியது, இதில் பல வீடுகள் சேதமடைந்தன. இப்பள்ளி மாணவிகள் வீடு இழந்ததால் குடியிருக்க இடம் இல்லாமல் ஒரு மாத காலம் வரை பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். பின்னர் மாணவிகள் இயல்பு நிலை க்கு திரும்பினர். மாணவிகளை ஆசிரிய ர்கள் தேர்வுக்கு தயார்படுத்தி, சிறப்பு பயிற்சிகளை காலை மாலையும், வழங்கினர்.இதையடுத்து தற்போது ப்ளஸ் 2 தேர்வில் இப்பள்ளி மாணவிகள் 425 பேர் தேர்வு எழுதினர். இதில் பள்ளி அளவில் சஹானா என்ற மாணவி 425 மதிப்பெண் பெற்றிருந்தார். பள்ளி தேர்ச்சி விகிதம் 99.88 சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.
இதில் 208 மாணவிகள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவிகித தேர்ச்சி விழுக்காட்டை அடைந்தனர். இதில் பள்ளி அளவில் ஜெயதுர்கா என்ற மாணவி 478 மதிப்பெண் பெற்றார். இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் எம்எல்ஏவுமான எம்.கோவி ந்தராசு மற்றும் பொருளாளர் எஸ்.எம்.நீலகண்டன் ஆகியோர் கூறியதாவது: இப்பள்ளி 1966ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உய ர்ந்தது. இப்பள்ளியில் 95 சதவிகிதம் விவசாயிகள், விவசாய கூலித் தொழி லாளர்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பி னரின் குழந்தைகள் தான் படித்து வருகி ன்றனர். இந்தாண்டு நூறு சதவிகித்தை எட்ட வேண்டும் என கடும் முயற்சியை ஆசிரியர்கள் எடுத்த நிலையில் கஜா புயல் வந்தது. பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்பட்ட மாணவிகள், அதிலிருந்து உடனடியாக மீண்டு வந்து தேர்வை எதிர்கொண்டார்கள். ப்ளஸ் 2 வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி பெற முடியாமல் போனாலும் தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் 100 சதவி கித்தை பெற்றுள்ளோம். தற்போது முதன் முறையாக இப்பள்ளி நூறு சதவிகித்தை தற்போது பெற்றுள்ளது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. இதற்கு ஒத்துழைப்பை நல்கிய பெற்றோர்களு க்கு நன்றியை தெரிவிக்கிறோம் என்றனர்.
நன்றி: தீக்கதிர்