தேசிய வாலிபால் போட்டி பேராவூரணி மாணவி சாதனை.

Peravurani Town
0

தேசிய வாலிபால் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற பேராவூரணி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடாகாடு முனிக்கோயில் பாலம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்- சரஸ்வதி தம்பதிகள், கூலித் தொழிலாளி. இவர்களது மகள் என்.நிஷா(14) இவர் எட்டாம் வகுப்பு வரை, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், அதன் பிறகு 10-ஆம் வகுப்பை ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிர மாநிலம் கோபர்கான் ஷீரடியில் 27-ஆவது மினி நேஷனல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அதில் தமிழக அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. இந்த அணியில் இடம் பெற்ற வீராங்கனை என்.நிஷா துணைக் கேப்டனாக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு பெரிதும் உதவினார். இவர் பேராவூரணி எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலம் பயிற்சி பெற்று வந்தார். சாதனை மாணவி என்.நிஷாவை எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் ஆர்.பாரதிதாசன், எஸ்.நீலகண்டன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மே 2 ஆம் தேதி மாணவிக்கு எஸ்.எம்.என். ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பள்ளி தலைமையாசிரியர் சி.கஜானா தேவி, அணைவயல் பாரத் பால் குழுமம், விளையாட்டு ஆர்வலர் பாக்யலட்சுமி திருநீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

நன்றி: தீக்கதிர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top