பேராவூரணி அருகே நாடாகாடு முனிக்கோயில் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன்-சரஸ்வதி தம்பதிகள். இவர்கள் கூலித் தொழிலாளிகள். இவர்களது மகள் என்.நிஷா(14). இவர் எட்டாம் வகுப்பு வரை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், இதன் பிறகு 10-ஆம் வகுப்பை ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் கோபர்கான் ஷீரடியில் நேஷனல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில்30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அதில் தமிழக அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்த அணியில் வீராங்கனை என்.நிஷா துணைக் கேப்டனாக சிறப்பாக விளையாடினார். இவர் பேராவூரணி எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மூலம் பயிற்சி பெற்று வந்தார். மாணவி என்.நிஷாவுக்கு பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழாநடைபெற்றது. தலைமை ஆசிரியர் சி.கஜானா தேவி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர்எஸ்.எம்.நீலகண்டன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சோலை வரவேற்றார். ஓய்வு பெற்றதலைமை ஆசிரியர் இரா.சந்திரசேகரன், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் சி.குமாரவேல், வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, கல்வியாளர் கௌதமன், அணவயல் பாரத் பால்நிறுவன சங்கர், எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடெமி கே.ஆர்.குகன்,தலைமை ஆசிரியர் வாசுகி, ஆசிரியை லெட்சுமி, பாக்யலட்சுமி திருநீலகண்டன் வாழ்த்திப் பேசினர். மாணவி என்.நிஷா ஏற்புரையாற்றினார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் அன்னமேரி நன்றி கூறினார். முன்னதாக மாணவி என்.நிஷா, பயிற்சியாளர்கள் பாரதிதாசன், நீலகண்டன் ஆகியோர் தலைமையில் ரயிலடியில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
நன்றி: தீக்கதிர்