பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம், ஜூனியர் ரெட் கிராஸ், தேசியப் பசு மைப் படை சார்பாக சுற்றுச்சூழல் தினம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் வீ.மனோ கரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், கா.பழனித்துரை, பி.பால சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ந.கோபி கிருஷ்ணா, இளையோர் செஞ்சிலுவை சங்க அலுவலர் அ. சரவணன், உடற்கல்வி ஆசிரியர் இரா.மதியழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கல்வி ஆண்டில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்று நடுவதற்கு இலக்கு வகுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நன்றி : தீக்கதிர்