தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பேராவூரணி உட்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி இன்று அதிகாலையிலே மக்கள் நீராடி புத்தாடை அணிந்து தீபாவளியை கொண்டினர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். வீடுகளில் பலகாரங்கள் செய்து அருகில் உள்ள வீடுகளுக்கு கொடுத்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
தீபாவளியையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உறவினர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.