பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் பள்ளியில் மருத்துவ முகாம்- கண் பரிசோதனை நடைபெற்றது. பேரா வூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம், கோவை துரோணா இன்ஃப்ரா டிசைன்ஸ், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ராஜராஜன் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய முகாமிற்கு கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.நீலகண்டன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் வரவேற்றுப் பேசினார். பேரா வூரணி முன்னாள் பேரூராட்சித் தலைவர் என்.அசோக் குமார் முகாமைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி னார். வீரியங்கோட்டை பொ.பழனிவேல், ஓய்வு பெற்ற தலை மையாசிரியர் எம்.குலாம் கனி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடையநாடு ஹெச்.அப்துல் ஜப்பார், வீரி யங்கோட்டை இ.வேலுச்சாமி, டாக்டர் எஸ்.ஆர்.சந்திரசேக ரன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக லயன்ஸ் சங்கப் பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை நன்றி கூறினார். முகாமில் ரத்த அழுத்தம், இசிஜி, ரத்த சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, 183 பயனாளி களுக்கு மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. இதே போல் பேராவூரணி ஐ-கேர் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 112 பேர் பயனடைந்தனர்.
பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் பள்ளியில் மருத்துவ முகாம்.
அக்டோபர் 21, 2019
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க