பேராவூரணி நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

IT TEAM
0

பேராவூரணியில் புதிய பஸ் நிலையம் அருகில் நீலகண்டபுரம் செல்லும் ரெயில்வே கேட் நீண்ட நாட்களாக பழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த ரெயில்வே கேட்டை நடைபெற்று முடிந்த காரைக்குடி-திருவாரூர் அகல ரெயில் பாதை சீரமைப்பின் போது நிரந்தரமாக மூடுவதாக ரெயில்வேதுறை முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்லக்கூடிய கழனிவாசல், கொரட்டூர், சோழகனார்வயல், ஆதனூர், மணக்காடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். ரெயில்வே உபயோகிப்பாளர்கள் கூட்டமைப்பு சங்கம் ஏற்படுத்தி அவர்கள் மூலம் மத்திய, மாநில அமைச்சர்கள், ரெயில்வே துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

தற்போது பேராவூரணி பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தண்ணீர் கீழ்பாலத்தில் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. போக்குவரத்து மற்றும் நடந்து செல்வதற்கு கூட இந்த பாதை பயனற்ற நிலையில் உள்ளது. எனவே நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லையென்றால் ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் பேராவூரணி பொதுமக்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதும் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

நன்றி: தினந்தந்தி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top