பேராவூரணி நாடங்காடு - கொன்றைக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை.

IT TEAM
0

பேராவூரணி பகுதியில் சேதம டைந்த நிலையில் காணப்படும் சாலை களை சீரமைக்க வலியுறுத்தி, பழுத டைந்த சாலையில் நாற்று நடும் போ ராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு கடைவீதி யில் ரயில்வே கேட் அருகில் இருபுறம் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், கொன்றைக்காடு ஆற்றுப் பாலத்தில் இருந்து, ஆற்றின் ஓரமாக திருப்பூரணிக்காடு வரை செல்லும் சுமார் 3 கி.மீ நீளச்சாலை, இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகரமான பள்ளங்களுடன் உள்ளது. குண்டுங் குழியுமான பழுதடைந்த இச்சாலை யில் இருபுறமும் புதர்கள் மண்டிக் கிடப்ப தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.  புதிதாக இவ்வழியாக பயணிப் போர் சாலையில் உள்ள பள்ளத்தை கவனிக்காமல் சென்றால், ஆற்றில் தவறி விழுந்து உயிர் போகும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்கள் உமிழும் வெளிச்சத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவதும், அடிபடுவதும் தொடர்கதை யாக உள்ளது.  இதே போல் தென்னங்குடியில் இருந்து திருப்பூரணிக்காடு வழி நாடங் காடு செல்லும் சாலையும் பழுதடைந்து பல்லாங்குழி போல உள்ளது. வாகன ஓட்டிகள் தத்தித் தத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இவ்வழியாக பயணிக்கும் அரசுப் பேருந்துகள், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. கொன்றைக்காடு ஆசாரித் தெருவிலும், பழுதடைந்த சாலை பல  ஆண்டுகளாக சரிசெய்யப்படாமலேயே உள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறு கையில், “பழுதடைந்து போக்குவரத்து க்கு பயனற்ற நிலையில், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த சாலையையும், இதே போல் பேராவூ ரணி ஒன்றியம் முழுவதும் சேதம டைந்த நிலையில் காணப்படும் சாலை களையும் உடனடியாக சீரமைக்க அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை செய்யத் தவறினால் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து சேதமடைந்த நிலையில் உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
நன்றி: தீக்கதிர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top