கரிசவயல் பள்ளியில் குழந்தைகள் திருநாள் கொண்டாட்டம்.
இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நமது உதவும் கரங்கள் சார்பில் கரிசவயல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே உரை நிகழ்த்தி இனிப்புகள், பிஸ்கட்கள் வழங்கப்பட்டது.
குழந்தைகள் தின நினைவாக ஒரு பெரிய புங்கைமரம் மேல்நிலைப் பள்ளியிலே நடப்பட்டது. நமது தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இத்தினத்தில் பிஸ்கட் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நமது உதவும் கரங்கள் அமைப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர், இவ்விழாவில் கலந்துகொண்ட ஷமீம் அப்பாஸ் த/பெ முகமது யாசீன் உதவும் கரங்கள் சார்பாக பள்ளிக்கு ரூ 5000 நன்கொடை வளங்கினார். இவ்விழாவிற்க்கான இனிப்பு மற்றும் பிஸ்கட் சிலவை அவரே ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவிற்க்கு ஏற்பாடு செய்த உதவும் கரங்கள் அமைப்பிற்க்கு பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.
நன்றி:Ibrahim Ibu