பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை - தொடக்க விழா

IT TEAM
0


முன்னாள் மாணவர் கழகங்களின் வளர்ச்சியும் - சமூக மாற்றமும்.

பசுமை நிறைந்த நினைவுகளே!
பாடித் திரிந்த பறவைகளே!
பழகிக் கழித்த தோழர்களே!
பறந்து செல்கின்றோம் நாம்....

இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொருவரின் பள்ளி-கல்லூரி பருவ காலத்தின் நினைவுகளை சுமந்து தமிழ் மண்ணில் பசுமையாய் நிலைத்து நிற்கிறது.

படித்த காலத்தின் நினைவுகள் பசுமையானது, நிகழ்காலத்தில் வெறுமையைத் தருவது. ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அடுத்த தலைமுறையைப் பார்த்து எங்களப்போல இந்த தலைமுறை இல்லை, நாங்கல்லாம் எப்படி மகிழ்ச்சியா இருந்தோம் தெரியுமா? என்று கூறுவதை பார்ப்போம். இதுதான் எதார்த்தம். எல்லோருக்கும் இளமைக்கால நினைவுகள் மற்றவற்களைவிட இனிமையானது, சுகமானது.

எல்லாவற்றையும் தாண்டி நிகழ்காலத்தில் அரசுப்பள்ளிகளின் நிலை முன்னாள் மாணவர்களை வேதனை கொள்ளச் செய்கிறது. தற்கால அரசுப் பள்ளி மாணவர்களின் சவால்கள், அவர்களின் எதிர்காலம் குறித்தான முன்னாள் மாணவர்களின் அக்கறை எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை துளிர்விடச் செய்கிறது.

அறந்தாங்கியில் அரசுப்பள்ளிப் பாதுகாப்பு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள், சமூக நீதி, பெண்கள்-குழந்தைகள் நலன் போன்ற பல தளங்களில் இயங்கிவரும் திசைகள் அமைப்புகூட முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்புதான். இப்போது பல்வேறு துறைகளில் துடிப்போடு இயங்கிக்கொண்டிருக்கும் பலர் தங்கள் பள்ளிகளை தத்தெடுத்துக்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கேற்க வருகிறார்கள்.

பேராவூரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1997 - 1998 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் கூடி பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பை தொடங்க உள்ளனர். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியும், அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு இந்த அமைப்பை தொடங்குவதாக கூறும் இவர்களின் இலக்கு மிகவும் நேர்மையானது.


தெளிவான நோக்கத்தோடு தொடங்கப்படும் இந்த அமைப்பு பல்வேறு சாதனைகள் புரிய மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளையின் தொடக்க விழா அக்டோபர் 02, வெள்ளியன்று மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ நீலகண்ட விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Posted By:மெய்ச்சுடர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top